ஆதிபராசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா

தெற்குகழுகுமலை ஆதிபராசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா நடைபெற்றது.

Update: 2023-05-08 18:45 GMT

கழுகுமலை:

தெற்கு கழுகுமலை ஆதிபராசக்தி மாரியம்மன் கோவில் பொங்கல் விழா கடந்த 30-ந் தேதி கால்நாட்டு நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. கடந்த 6-ந்தேதி இரவு 10 மணிக்கு மாக்காப்பு சாந்தி விசேஷ பூஜை நடந்தது. பின்னர் வில்லிசை கச்சேரி நடை பெற்றது. 7-ந்தேதி திரளான பக்தர்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். பகல் 12 மணியளவில் உச்சிகால பூஜை மற்றும் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. இரவு 7 மணிக்கு கும்பிடு சேவை நிகழ்ச்சி மற்றும் நள்ளிரவு 12 மணியளவில் சாமகொடை பூஜை நடந்தது. இரவு 9மணிக்கு வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று காலை 7 மணிக்கு பொங்கலிடுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பெண்கள் கோவில் முன்பு பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். காலை 11 மணிக்கு கிடாய் வெட்டுதல் மற்றும் அம்மனுக்கு விசேஷ பூஜை நடந்தது. மாலை 5 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. 6 மணிக்கு வண்ணமயமான வாணவேடிக்கை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்