புதருக்குள் மறைந்த அடிபம்பு
புதருக்கு நடுவே அடிபம்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
திருப்பத்தூரை அடுத்த லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சி ஆலமரத்து வட்டத்தில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த அடிபம்பு ஒன்று பழுதடைந்தது. அந்த அடிபம்பை பழுது நீக்கி சரி செய்யாததால், அதைச் சுற்றி புதர் வளர்ந்து காடுபோல் காட்சியளிக்கிறது. குடிநீர் தட்டுப்பாடு காலத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வந்த அடிபம்பை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் விடுத்துள்ளனர்.