ஆதிதிராவிடர்கள் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் ஆதிதிராவிடர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கள்ளக்குறிச்சி;
கள்ளக்குறிச்சி ஏமப்பேர் காலனியில் வசிக்கும் ஆதிதிராவிட மக்கள் 65 பேருக்கு தச்சூரில் வீட்டுமனை பட்டா வழங்க கோரி கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தனிநபர் ஆக்கிரமித்து பயிரிடப்பட்டுள்ள அந்த இடத்தை மீட்டு பட்டா வழங்கக்கோரி ஆதிதிராவிடர்கள் கோஷமிட்டனர். இதில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.