ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளை இணைக்க கூடாது

ஆதிதிராவிட நலப்பள்ளிகளை கல்வித்துறையுடன் இணைக்க கூடாது என தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அடிப்படை ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-05-04 19:07 GMT


ஆதிதிராவிட நலப்பள்ளிகளை கல்வித்துறையுடன் இணைக்க கூடாது என தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அடிப்படை ஊழியர் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பொதுக்குழு கூட்டம்

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அடிப்படை ஊழியர் சங்கத்தின் விருதுநகர் மாவட்ட கிளை பொதுக்குழு கூட்டம் விருதுநகரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாந்தகுமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வைரவன் சிறப்புரையாற்றினார்.

சங்க மாநில பொதுச் செயலாளர் பாண்டியராஜா விளக்கவுரையாற்றினார். இக்கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

காலமுறை ஊதியம்

மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர் நல கல்வி விடுதிகளில் காலியாக உள்ள சமையலர், காவலர், அலுவலக உதவியாளர், துப்புரவு பணியாளர் பணியிடங்களை பணிமூப்பு பட்டியல் வெளியிட்டு உடனடியாக நிரப்ப வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு மூன்று விதமான ஊதியம் வழங்கப்படும் நிலையில் அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆதிதிராவிட நலப்பள்ளிகளை கல்வித்துறையுடன் இணைப்பதாக நடப்பாண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு இணைக்க கூடாது. தேர்தல் அறிக்கையின் படி புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பணி நியமனத்திற்காக காத்திருக்கும் வாரிசுதாரர்களுக்கு பணி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மகேந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்