ஆதி திராவிடர் நலத்துறை பெயர் மாற்றம்? - அமைச்சர் மதிவேந்தன் தகவல்
பழங்குடியின மக்களுக்கான நலத்திட்டங்கள் விரைவாக அவர்களை சென்றடைய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.;
சிவகங்கை,
ஆங்கிலேயரை எதிர்த்து ஆயுதம் ஏந்தி போராடிய குயிலியின் 244-வது நினைவு தினத்தை முன்னிட்டு, சிவகங்கையில் உள்ள வீரத்தாய் குயிலி உருவச்சிலைக்கு ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆதி திராவிடர் நலத்துறை என்கிற பெயரை மாற்றுவது குறித்து முதல்-அமைச்சர் பரிசீலிப்பார் என்று தெரிவித்தார். மேலும், ஆதி திராவிட பழங்குடியின மக்களுக்கான நலத்திட்டங்கள் விரைவாக அவர்களை சென்றடைய தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்தார்.