மலையாள கருப்புசுவாமி கோவிலில் ஆடி அமாவாசை விழா

திண்டுக்கல்-கோவிலூர் சாலையில், குளத்தூரை அடுத்துள்ள கூட்டாத்துப்பட்டியில் மலையாள கருப்புசுவாமி கோவிலில் ஆடி அமாவாசை விழா நடை பெற்றது.

Update: 2023-07-17 20:00 GMT

திண்டுக்கல்-கோவிலூர் சாலையில், குளத்தூரை அடுத்துள்ள கூட்டாத்துப்பட்டியில் மலையாள கருப்புசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அதன்படி நேற்று ஆடிமாத முதலாவது அமாவாசையை முன்னிட்டு கருப்புசுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதைத்தொடர்ந்து கருப்புசுவாமிக்கு படையலிட்டு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடந்தது. பின்னர் கோவில் பூசாரி மதனகோபால் ஆணிப்படுக்கையில் அமர்ந்தும், அரிவாள் மீது ஏறி நின்றும் அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திண்டுக்கல், கோவை, கரூர், நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கருப்புசுவாமியை தரிசனம் செய்தனர். பின்னர் கோவிலில் கிடாவெட்டி பக்தர்களுக்கு விருந்து அளிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்