மன்னார்குடி கோட்டத்தில் 20 ஆயிரம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைப்பு

மன்னார்குடி கோட்டத்தில் 20 ஆயிரம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது.

Update: 2022-12-01 19:00 GMT

மன்னார்குடி கோட்டத்தில் 20 ஆயிரம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது.

ஆதார் இணைப்பு

வீட்டு மின் உபயோகதாரர்கள் மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் தங்கள் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என மின்வாரியம் அறிவித்தது. இதையடுத்து பொதுமக்கள் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்து வருகிறார்கள். இதெற்கென மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் இயங்கி வருகின்றன.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கோட்டத்தில் மின் வாரிய அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஆய்வு

அந்த வகையில் மன்னார்குடி கோட்டத்தில் உள்ள ஒரு லட்சத்து 80 ஆயிரம் வீட்டு மின் இணைப்பு எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. மன்னார்குடி சஞ்சீவி தெருவில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இயங்கிவரும் ஆதார் முகாமில் நடைபெறும் பணிகளை மன்னார்குடி செயற்பொறியாளர் மணிமாறன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது விரைந்து பணியினை மேற்கொள்ள ஆலோசனைகள் வழங்கினார். ஆய்வின்போது உதவி செயற் பொறியாளர் சம்பத் உடனிருந்தார். மன்னார்குடி கோட்டத்தில் 20 ஆயிரம் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்