சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதிய அளவில் கையிருப்பு- வேளாண்மை இணை இயக்குனர் தகவல்

சாகுபடிக்கு தேவையான உரங்கள் போதிய அளவில் கையிருப்பு உள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்தார்.

Update: 2023-09-16 19:31 GMT

சிவகங்கை மாவட்டவேளாண்மை இணை இயக்குனர் தனபாலன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது,

சிவகங்கை மாவட்டத்தில் தற்போது பருவமழையினை எதிர்நோக்கி அனைத்து வட்டாரங்களிலும் விவசாயபணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விவசாயபணிகளுக்கு தேவையான உரங்கள் மாவட்டத்தின் அனைத்து தொடக்கவேளாண்மை கூட்டுறவுசங்கங்களிலும் இருப்பு வைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

தற்போது சிவகங்கை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்குவதற்கு யூரியா 2282 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 1568 மெட்ரிக் டன், பொட்டாஸ் 578 மெட்ரிக் டன், காம்ளக்ஸ் 2029 மெட்ரிக் டன், தொடக்க வேளாண்மை கூட்டுறவுசங்கங்கள் மற்றும் தனியார் உரக்கடைகளில் இருப்பு உள்ளது. தேவையான விவசாயிகள் வாங்கி பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு தொடக்கவேளாண்மை கூட்டுறவுசங்கங்கள் மூலம் வரும் சம்பாநெல் பயிருக்கும், தற்போதுள்ளகரும்புபயிருக்கும் தேவைப்படும் உரங்களை தாமதமின்றி வழங்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க செயலாளர்களுக்குவேளாண்மை இணை இயக்குனர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகளுக்கு தேவைப்படும் உரங்களை பயிர்சாகுபடி பரப்பிற்கு ஏற்றவாறு உடனடியாக வழங்கிட தொடக்கவேளாண்மை கூட்டுறவு சங்கச்செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதில் நெல் நுண்ணூட்ட உரம் 67.73 மெட்ரிக் டன், சிறுதானியங்கள் நுண்ணூட்ட உரம் 9.73 மெட்ரிக்டன், பயறு நுண்ணூட்ட உரம் 4.143 மெட்ரிக் டன், தென்னை நுண்ணூட்ட உரம் 27.90 மெட்ரிக் டன், நிலக்கடலை நுண்ணூட்ட உரம் 4.63 மெட்ரிக் டன், மொத்தம் 114.13மெட்ரிக் டன், திரவஉயிர் உரங்கள் 18356 லிட்டரும் இருப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்