திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-11-19 12:40 GMT

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர்பிரதாப்சிங் ஆய்வு செய்தார்.

கோணலூர் கிராமத்தில் 2021-22-ம் ஆண்டிற்கான பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டி முடிக்கப்பட்ட பணிகளை அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனையடுத்து நா.கெங்கப்பட்டு கிராமத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடத்தை பார்வையிட்டு, அங்கு மரக்கன்றுகளை நட்டார். அப்போது நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் காந்திமதி (கிராம ஊராட்சிகள்), துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கோணலூர் கணேசன், நா.கெங்கபட்டு மோசஸ், ஒன்றிய பொறியாளர்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்