வளர்ச்சிப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு

ஆரணி பகுதியில் வளர்ச்சிப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-12-16 17:21 GMT

ஆரணி

மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் தச்சூர் கிராமத்தில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.5 கோடியே 50 லட்சம் மதிப்பில் 111 வீடுகள் கட்டுவதற்காக பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் கலெக்டர் ஏ.பிரதாப் சிங், பயிற்சி கலெக்டர் ரஷ்மிராணி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு ெசய்தனர்.

மேலும் ஆகாரம் கிராமத்தில் 15-வது மாநில நிதி குழுவில் ரூ.15 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பில் 2 வகுப்பறை கொண்ட புதிய பள்ளி கட்டிடம் அமைக்கப்பட்டு வரும் பணி, ரூ.15 லட்சம் மதிப்பில் சத்துணவு சமையல் அறை, புதிய அங்கன்வாடி மையம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதேபோல ஆரணி ஊராட்சி ஒன்றியத்தில் அரியப்பாடி கிராமத்தில் பாரத பிரதமர் கிராமப்புற சாலை மேம்பாட்டு திட்டத்தில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணி, ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டு வரும் குழாய் பதிக்கும் பணிகளையும் ஆய்வு செய்தனர்.

அங்கு பணிக்கு பயன்படுத்துகிற ஜல்லி, மணல், செங்கல், உள்ளிட்டவைகளின் தரம் பார்த்தனர். மொரப்பந்தாங்கல் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் தொகுப்பு வீடு, காட்டேரி கிராமத்தில் உறிஞ்சிக் குழாய் அமைக்கும் பணிகளையும் அவர்கள்ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது ஊரக வளர்ச்சித்துறை ஊராட்சிகள் உதவி செயற்பொறியாளர் சுரேஷ்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திலகவதி, சபிதா, பாண்டியன், இல.சீனிவாசன் மற்றும் ஒன்றிய பொறியாளர்கள், பணிதள மேற்பார்வையாளர்கள், சாலை ஆய்வாளர் யுவராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்