வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு

செஞ்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தாா்.

Update: 2023-01-05 18:45 GMT

செஞ்சி:

செஞ்சி ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் அரசு சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர்(ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த வகையில் நடுநெல்லிமலை கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குளம் சீரமைக்கும் பணி, சிமெண்டு மற்றும் தார் சாலை அமைக்கும் பணியை கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன் ஆய்வு செய்தார். அப்போது அவர், பணியை தரமாகவும், விரைந்தும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது செஞ்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கேசவலு, வெங்கடசுப்பிரமணியம், ஊராட்சி மன்ற தலைவர் தாட்சாயினி கார்த்திகேயன், ஒன்றிய பொறியாளர் குணசேகர், ஊராட்சி செயலாளர் சஞ்சய் காந்தி மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்