செங்கோட்டை-– மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்; ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை

செங்கோட்டை-– மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும் என ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-01-30 18:45 GMT

சங்கரன்கோவில்:

தெற்கு  ரெயில்வே பொது மேலாளருக்கு, ெரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர் ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

தென்காசி மாவட்டத்திற்கு தீபாவளி பரிசாக கிடைத்த செங்கோட்டை- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கத்தால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் இருந்து டெல்டா மாவட்டங்களை இணைக்கும் வகையில் பகல் நேர ெரயில் வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் மயிலாடுதுறை - திண்டுக்கல் இடையே இயங்கி வந்த (16847/16848) ெரயிலையும், மதுரை - செங்கோட்டை (06665/06662) ெரயிலையும் ஒன்றாக இணைத்து ஒரே ெரயிலாக இணைத்து தீபாவளி தினத்தன்று (16847) மயிலாடு துறை - செங்கோட்டை விரைவு ெரயில் மயிலாடுதுறையிலிருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு செங்கோட்டை வந்து சேர்ந்தது. செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ெரயில் (16848) செங்கோட்டையில் இருந்து (அக்டோபர் 25-ந் தேதி) காலை 7 மணிக்கு புறப்பட்டு சென்றது.

செங்கோட்டை - மயிலாடுதுறை ெரயில் பயணிக்கும் வழித்தடம் அனைத்திலும் வரலாற்று சிறப்புமிக்க கோவில்களும், சுற்றுலா தலங்களும் அமைந்துள்ளன. தற்போது 12 பெட்டிகளுடன் இயங்கி வரும் இந்த ெரயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் இணைத்து 16 பெட்டிகளுடன் இயங்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கோட்டையில் இருந்து திருத்தங்கல் வரையுள்ள ெரயில் நிலையங்களில் ஏறும் பயணிகள் தற்போது திண்டுக்கல், திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை நேரடியாக செல்ல ரெயில் கிடைத்துள்ளது. இதேபோல் டெல்டா மாவட்ட பகுதிகளை சார்ந்தோர் சிவகாசி, ராஜபாளையம், சங்கரன்கோவில், தென்காசி சுற்றுவட்டார பகுதிகளுக்கு வருவதற்கு நல்ல இணைப்பாக இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்