ராமாபுரம் அரசு பள்ளிக்குகூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிசெல்லகுமார் எம்.பி. தொடங்கி வைத்தார்
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் ஒன்றியம் ராமாபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.41 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். ஊர் கவுண்டர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இதில் செல்லகுமார் எம்.பி. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் வெங்கடேசன், காங்கிரஸ் கட்சி மாவட்ட துணை தலைவர் சேகர், முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சில் ஜேசு, நகர தலைவர்கள் தேவநாராயணன், முபாரக், சேவாதள மாவட்ட தலைவர் தேவராஜ் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கோவிந்தசாமி, சக்திவேல், கருணாமூர்த்தி, நாகராஜ், முத்து, சென்னப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.