தலைவாசல் கால்நடை பூங்காவில் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

தலைவாசல் கால்நடை பூங்காவில் கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு செய்தார்.

Update: 2022-07-21 19:28 GMT

தலைவாசல்:-

தலைவாசல் அருகே வி.கூட்டு ரோடு பகுதியில் ரூ.1,000 கோடியில் கால்நடை பூங்கா அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கு நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை கால்நடை பராமரிப்பு துறை கூடுதல் தலைமை செயலாளர் ஜவகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர் தீவன அபிவிருத்தி ஆலை கட்டும் பணியை நேரில் பார்வையிட்டார். கட்டிட பணி முழுமை அடைந்து பயன்பாட்டுக்கு வரும்போது சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பயணிகள் இங்கு வந்து ஓய்வெடுத்து செல்லலாம். மேலும் இங்கு கால்நடை துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை பாார்வையிடலாம். கட்டுமான பணிகள் 95 சதவீதம் முடிந்து விட்டதாகவும் வருகிற பொங்கல் பண்டிகைக்குள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமை செயலாளர் ஜவகர் உத்தரவிட்டார். ஆய்வின் போது கால்நடை பூங்கா சிறப்பு அலுவலர் பிரபாகரன், தொழில்நுட்ப ஆலோசகர் சரவணன், உதவி தொழில் நுட்ப ஆலோசகர் தேவேந்திரன், சேலம் மாவட்டமண்டல இணை இயக்குனர் புருஷோத்தமன், கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் கால்நடை ஆராய்ச்சி நிலைய முதல்வர் இளங்கோ, ஆட்டுப்பண்ணை துணை இயக்குனர் ராஜேந்திரன், தலைவாசல் தாசில்தார் வரதராஜன் உள்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்