கூடுதல் பஸ் நிலைய சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும்-மத்திய மந்திரியிடம், செந்தில்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை

கூடுதல் பஸ் நிலைய சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என மத்திய மந்திரியிடம், செந்தில்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார்.

Update: 2023-04-25 18:06 GMT

வாணியம்பாடி,

கூடுதல் பஸ் நிலைய சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என மத்திய மந்திரியிடம், செந்தில்குமார் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார்.

வாணியம்பாடி ெரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரக்கோரியும், நடைமேடை பகுதியை விரிவாக்கம் செய்து தரக்கோரியும், பழுதடைந்துள்ள ெரயில் நிலைய அதிகாரிகள் அறைகளை புதுப்பிக்கக்கோரியும் மத்திய அரசுக்கும், ெரயில்வே நிர்வாகத்திற்கும் கடந்த மாதம் செந்தில்குமார் எம்.எல்.ஏ. மனு அளித்து இருந்தார்.

அதன்பேரில் ரெயில் நிலையத்தை மேம்படுத்த மத்திய அரசு உடனடியாக நிதி ஒதுக்கி பணிகளைத் தொடங்க ஆணையிட்டதற்காகவும், வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காக நிதி ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்தும், நேற்று வாணியம்பாடிக்கு வந்த மத்திய மந்திரி விஜயகுமார் சிங்கை, வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் சந்தித்து, சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தார்.

மேலும் வாணியம்பாடி பைபாஸ் ரோட்டில் உள்ள கூடுதல் பஸ் நிலையம் பல கோடி செலவில் கட்டப்பட்டு கடந்த 12 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது. அதனை திறந்து செயல்படுத்த உடனடியாக சாலை விரிவாக்க பணி செய்து தரக்கோரியும் மனு அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்