படுகளம் கோவிலில் நடிகர்கள் விஜயகுமார், அருண்விஜய் சாமி தரிசனம்

படுகளம் கோவிலில் நடிகர்கள் விஜயகுமார், அருண்விஜய் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2022-06-24 19:50 GMT

மணப்பாறை, ஜூன்.25-

நடிகர் அருண்விஜய் நடித்த யானை படம் வருகிற 1-ந் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து நடிகர் அருண்விஜய், அவரது தந்தை விஜயகுமார் குடும்பத்துடன் நேற்று திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே படுகளத்தில் உள்ள புகழ்பெற்ற பொன்னர், சங்கர், தங்காள், மந்திரம் காத்த மகாமுனி, மாசி கருப்பண்ண சாமி உள்ளிட்ட தெய்வங்களை கொண்ட குளக்கரை கன்னிமார் கோவிலுக்கு வந்தனர். அங்கு படம் வெற்றியடைய வேண்டி சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர் கோவிலில் இருந்து புறப்பட்டு சென்ற அருண் விஜய் வழியில் ஒரு கடையில் நிறுத்தி முறுக்கு சுடுவதை பார்த்து விட்டு தொழிலாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும் தன்னுடைய முகநூல் பக்கத்திலும் முறுக்கு சுடுவதை பார்த்த படத்தை வெளியிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்