முத்துமலை முருகன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்
முத்துமலை முருகன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார்
பெத்தநாயக்கன்பாளையம்:-
சேலம் மாவட்டம் புத்திரகவுண்டம்பாளையம் முத்துமலை முருகன் கோவிலில் திரைப்பட நடிகர் யோகிபாபு நேற்று குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். அப்போது மூலவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டார். பின்னர் 146 அடி உயர முருகன் வேலுக்கு உச்சியில் சென்று பன்னீர் அபிஷேகம் செய்தார். நடிகர் யோகிபாபுக்கு கோவில் நிர்வாகி ஸ்ரீதர் மாலை அணிவித்து வரவேற்றார்.