பழனி முருகன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம்
பழனி முருகன் கோவிலில் நடிகர் யோகிபாபு சாமி தரிசனம் செய்தார்.
பழனி முருகன் கோவிலில் அரசியல் கட்சியினர், நடிகர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் அவ்வப்போது வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அந்த வகையில், நகைச்சுவை நடிகர் யோகிபாபு, பழனி முருகன் கோவிலுக்கு நேற்று வந்து சாமி தரிசனம் செய்தார். முன்னதாக ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு சென்ற அவர் முருகனை தரிசனம் செய்தார். அதன்பிறகு போகர் சன்னதிக்கு சென்று வழிபட்டார்.
இதைத்தொடர்ந்து ரோப்கார் மூலம் அடிவாரத்துக்கு வந்த யோகிபாபு, கோவை மாவட்டம் பொள்ளாச்சிக்கு காரில் புறப்பட்டு சென்றார். நடிகர் யோகிபாபுவை கண்ட பக்தர்கள், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.