டைரக்டர் மனோபாலா உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி..!

டைரக்டர் மனோபாலா உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

Update: 2023-05-03 13:05 GMT

சென்னை,

டைரக்டரும், நடிகருமான மனோபாலா உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறையினர் உள்ளிட்ட ஏராளமானோர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மேலும், மனோபாலா உடலுக்கு திரைத்துறையினர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் மனோபாலாவின் உடல் நாளை காலை 10.30 மணி அளவில் தகனம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், டைரக்டர் மனோபாலாவின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்து கொண்டார். 

Tags:    

மேலும் செய்திகள்