திருச்சியில் முதல்-அமைச்சர் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி - நடிகர் சிவகார்த்திகேயன் பார்வையிட்டார்

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன் பார்வையிட்டார்.

Update: 2023-04-25 16:12 GMT

திருச்சி,

திருச்சியில் உள்ள் தனியார் கல்லூரி மைதானத்தில் "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்ற தலைப்பில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் நடைபெறும் இந்த கண்காட்சியை பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். அதன் பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், "இந்த கண்காட்சியை பார்க்க வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. இதற்கு அழைப்பு விடுத்த அமைச்சர் கே.என்.நேருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒரு அரசு ஊழியரின் மகன் என்ற முறையில், அமைச்சர், மேயர் ஆகியோருடன் இணைந்து இந்த கண்காட்சியை பார்வையிடுவதில் எனக்கு பெருமை. இந்த கண்காட்சியை பார்க்கும் பொழுது நாம் எவ்வளவு பெரிய நாம் அடைய வேண்டுமோ அதற்கு நிறைய வலிகளையும் தியாகங்களையும் தாண்டி தான் வரவேண்டும் என்பது தெரிந்தது" என்று கூறினார்.


Full View



Tags:    

மேலும் செய்திகள்