நடிகர் ரோபோ சங்கர் சாமி தரிசனம்
பழனி முருகன் கோவிலில் நடிகர் ரோபோ சங்கர் தனது மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.;
பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் மட்டுமின்றி அரசியல் கட்சி பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் அவ்வப்போது வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமா நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர், தனது மனைவி பிரியங்காவுடன் நேற்று சாமி தரிசனம் செய்தார். இதற்காக நேற்று மாலை பழனி வந்த அவர் அடிவாரத்தில் இருந்து மின் இழுவை ரெயில் மூலம் மலைக்கோவிலுக்கு சென்றார். அங்கு முருகப்பெருமானை தரிசனம் செய்து விட்டு, மீண்டும் மின் இழுவை ரெயில் வழியாக கீழே இறங்கினார். முன்னதாக கோவிலுக்கு வந்த அவருடன் பக்தர்கள், கோவில் பணியாளர்கள் என பலரும் செல்பி எடுத்தனர்.