திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்

நடிகர் ரஜினிகாந்த் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

Update: 2023-07-01 06:32 GMT

திருவண்ணாமலை,

ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால்சலாம் படத்தின் படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் கடந்த 5 நாட்களாக அங்குள்ள தனியார் கல்லூரியில் தங்கியிருந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்தார்.

இந்த நிலையில், நேற்று படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், இன்று அதிகாலை நடிகர் ரஜினிகாந்த், அண்ணாமலையார் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். நடிகர் ரஜினிகாந்த கோவிலுக்கு வந்ததை அறிந்த பக்தர்கள் மற்றும் அவரது ரசிகர்ள், அவரை நோக்கி முண்டியடித்தபடி வந்துகொண்டிருந்தனர்.

கூட்டம் அதிகமானதை தொடர்ந்து, ரஜினிகாந்த் உடனடியாக சாமி தரிசனம் செய்துமுடித்துவிட்டு, பின்னர் அங்கிருந்து வேகமாக தனது காரில் ஏறி புறப்பட்டுச்சென்றார்.  


Tags:    

மேலும் செய்திகள்