நடிகர் மனோபாலா சாமி தரிசனம்
பழனி முருகன் கோவிலில் நடிகர் மனோபாலா சாமி தரிசனம் செய்தார்.;
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். தற்போது வைகாசி விசாக திருவிழா நடைபெற்று வருவதையொட்டி வெளியூரில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பழனிக்கு வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இந்நிலையில் திரைப்பட நடிகரும், இயக்குனருமான மனோபாலா பழனி முருகன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலைக்கோவிலுக்கு வந்தார். பின்னர் முருகப்பெருமானை வழிபட்டு சென்றார். முன்னதாக நடிகர் மனோபாலாவுடன் பக்தர்கள், பொதுமக்கள் என பலர் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.