ஆக்டிவா ஸ்மார்ட் கீ புதிய வாகனம் அறிமுக விழா

ஆக்டிவா ஸ்மார்ட் கீ புதிய வாகனம் அறிமுக விழா

Update: 2023-02-24 18:45 GMT

திருவாரூர் சிஏ ஹோண்டா ஷோரூம் சார்பில் ஆக்டிவா ஸ்மார்ட் கீ புதிய வாகனம் அறிமுக விழா நடைபெற்றது. இந்த வாகனத்தை பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. அறிமுகம் செய்து வைத்து வாடிக்கையாளர்களுக்கு ஹோண்டா ஆக்டிவா ஸ்மார்ட் கீ ஸ்கூட்டரை வழங்கினார். சிஏ குழும தலைவர் பாலமுருகன் வரவேற்றார். மோட்டார்சைக்கிள் ஸ்கூட்டர் பிரைவேட் லிமிடெட் ஏரியா சேல்ஸ் மேனேஜர் சதீஸ் வண்டியின் சிறப்பம்சங்களை விளக்கி கூறினார். இதில் ஏரிய சர்வீஸ் மேனேஜர் நந்து, நகர்மன்ற உறுப்பினர் வாரை பி்ரகாஷ், முன்னாள் வர்த்தக சங்க தலைவர் அருள், லெட்சுமி நாராயண வங்கி முன்னாள் மேலாளர் ராஜேந்திரன் மற்றும் வர்த்தக சங்க நிர்வாகிகள், இருசக்கர வாகனங்கள் பழுதுபார்ப்போர் நல சங்்்க நிர்வாகிகள், வர்த்தகர்கள், வாடிக்கையாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் சிஏ குழும பார்ட்னர் சரவணன் வெங்கடேஷ் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை சிஏ ஹோண்டா மேலாளர் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்