10 தாசில்தார்கள் அதிரடி இடமாற்றம்

குமரி மாவட்டத்தில் 10 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-10-07 22:00 GMT

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் 10 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

தாசில்தார்கள் பணியிட மாற்றம்

தாசில்தார்கள் இடமாற்றம் தொடர்பாக கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் தனி தாசில்தாராக (ச.பா.தி) பணியாற்றி வந்த ராஜாசிங், அகஸ்தீஸ்வரம் தாலுகா தாசில்தாராகவும், நாகர்கோவில் நகர நிலவரித்திட்ட அலகு-2 அலுவலராக பணியாற்றி வந்த முத்துலட்சுமி, அகஸ்தீஸ்வரம் தாலுகாவில் தனி தாசில்தாராகவும் (ச.பா.தி), செண்பகராமன்புதூர் டாஸ்மாக் ஆய மேற்பார்வை அலுவலராக பணியாற்றிய மூர்த்தி நாகர்கோவில் உசூர் மேலாளராகவும் (ஆயம்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோல் நாகர்கோவில் உசூர் மேலாளராக (ஆயம்) பணியாற்றிய ராஜேஸ்வரி என்பவர் நாகர்கோவில் நகர நிலவரித்திட்ட (அலகு-2) அதிகாரியாகவும், அகஸ்தீஸ்வரம் தாசில்தாராக இருந்த ராஜேஷ், நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு தனிதாசில்தாராகவும், நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை நிலமெடுப்பு தனிதாசில்தாராக இருந்த அஜிதா, ரெயில்வே நிலமெடுப்பு தனி தாசில்தாராகவும் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கூடுதல் பொறுப்பு

மேலும் நாகர்கோவில் நகர நிலவரித்திட்டம் (அலகு-1) அதிகாரியாக இருந்த கந்தசாமி புதிதாக தோற்றுவிக்கப்பட்ட ரெயில்வே நிலமெடுப்பு தனி தாசில்தாராகவும், தாசில்தார் (விடுப்பு முடிவுற்று) பாரதி புதிதாக தோற்றுவிக்கப்பட்ட ரெயில்வே நிலமெடுப்பு தனி தாசில்தாராகவும், தாசில்தார் (விடுப்பு முடிவுற்று) சரளாகுமாரி என்பவர் நாகர்கோவில் நகர நிலவரித்திட்டம் (அலகு-1) அதிகாரியாகவும், செண்பகராமன்புதூர் டாஸ்மாக் கிட்டங்கி மேலாளராக இருந்த சேகர் என்பவர் அதே பிரிவில் ஆய மேற்பார்வை அதிகாரியாகவும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்