வாடிக்கையாளர்களின் பார்வையில் தெரியும்படி விலை பட்டியல் வைக்க நடவடிக்கை
ஓட்டல்களில் வாடிக்கையாளர்களின் பார்வையில் படும்படி விலை பட்டியலை வைக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.;
ஓட்டல்களில் வாடிக்கையாளர்களின் பார்வையில் படும்படி விலை பட்டியலை வைக்க வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
விலைப்பட்டியல்
அரசின் விதிமுறைப்படி உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலைப்பட்டியலை வாடிக்கையாளர்கள் பார்வையில் படும்படி வைத்திருக்க வேண்டும். ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலான சாலையோர உணவகங்கள், ஓட்டல்கள் ஆகியவற்றில் உணவு பொருள்களின் விலைப்பட்டியலை வாடிக்கையாளர்களின் பார்வையில் படும்படி வைத்திருக்காததால் பல நேரங்களில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
மேலும் பஸ் நிலையங்கள் அருகில் உள்ள உணவகங்களில் ஓட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வகைகளின் விலைப்பட்டியல் பார்வையில் படாத நிலையில், பட்டியலுக்கான பணத்தை செலுத்தும் போது ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் இடையே தகராறு ஏற்படும் நிலை தொடர்கிறது.
வலியுறுத்தல்
எனவே மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் இதுகுறித்து அனைத்து உணவகங்கள், ஓட்டல்களில் ஆய்வு செய்து அரசு விதிமுறைப்படி வாடிக்கையாளர்கள் பார்வையில் படும்படி உணவு வகைகளின் விலை பட்டியல் வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.