பட்டாசு கடைகள், கிட்டங்கிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய நடவடிக்கை

வெடி விபத்துகள் அதிகரிக்கும் நிலையில் பட்டாசு கடைகள், கிட்டங்கி களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2023-05-18 19:14 GMT


வெடி விபத்துகள் அதிகரிக்கும் நிலையில் பட்டாசு கடைகள், கிட்டங்கி களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆய்வு குழு

மாவட்ட நிர்வாகம் பட்டாசுஆலைகளில் வெடி விபத்துகளை தவிர்ப்பதற்காக பல்வேறு ஆய்வு குழுக்களை அமைத்து விதிமீறல்களை கண்டறிந்து அவற்றை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த ஆய்வு குழு நடவடிக்கைகளிலும் தற்போது தொய்வு ஏற்பட்டிருக்கும் நிலையில் இதனை முறையாக கண்காணித்து பட்டாசுஆலை வெடி விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பை கண்காணிக்க நடவடிக்கை எடுப்பதாக சொல்லப்பட்டாலும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு வழக்கம் போல் நடந்து வருகிறது. இதனை தவிர்க்கவும் தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பட்டாசு கடை

தற்போது சிவகாசி, சாத்தூர், வெம்பக்கோட்டை ஆகிய பகுதிகளில் பட்டாசு கடைகள் மற்றும் கிட்டங்கிகளில் வெடி விபத்துகள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. மேலும் பட்டாசுஆலைகளிலும், மூலப்பொருட்கள் வைத்திருக்கும் அறைகளிலும் வெடி விபத்துகள் ஏற்படும் நிலை உள்ளது.

எனவே மாவட்ட நிர்வாகம் பட்டாசு கடைகள் மற்றும் கிட்டங்கிகளில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதை உறுதி செய்ய முறையான ஆய்வு நடத்தி அவ்வாறான ஏற்பாடுகள் இல்லாத கடைகள் மற்றும் கிட்டங்கிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டாசு ஆலை மூலப்பொருட்கள் இருப்பு அறைகளிலும் வெடி விபத்துகளை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

வலியுறுத்தல்

எனவே இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தனியாக ஒரு ஆய்வுக்குழு அமைத்து பட்டாசு கடைகள் மற்றும் கிட்டங்கிகளில் ஆய்வு செய்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாத கடைகள் மற்றும் கிட்டங்கிகளின் உரிமத்தை ரத்து செய்வதோடு அனைத்து கடைகள் மற்றும் கிட்டங்கிகளிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் இருப்பதை உறுதி செய்ய வேணடுமென மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்