கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை
விக்கிரமசிங்கபுரம் அருகே கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
விக்கிரமசிங்கபுரம்:
மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியான விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரத்தில் கடந்த 16-ந்தேதி இரவில் கரடி சாலையில் சுற்றித்திரிந்தது. இது அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து பாபநாசம் வனச்சரகர் சக்திவேல் தலைமையில் வனத்துறையினர் சிவந்திபுரம் பகுதியில் இரவில் பட்டாசு வெடித்து தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் விரைவில் கூண்டு வைத்து கரடியை பிடிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.