வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைதானவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நாகை சட்டையப்பர் மேல வீதியை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது52). இவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வெளிப்பாளையம் போலீசார் கைது செய்து நாகை கிளை சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் பாஸ்கரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர், கலெக்டர் அருண்தம்புராஜுக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில், பாஸ்கரனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, நாகை கிளை சிறையில் இருந்து திருச்சி மத்திய சிறைக்கு கொண்டு சென்று அடைத்தனர்.