தண்ணீர் திருட்டை தடுக்க அதிரடி ஆய்வு

அம்பராம்பாளையம் ஆற்றில் தண்ணீர் திருட்டை தடுக்க அதிரடி ஆய்வு பணி நடைபெற்றது. அப்போது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-11 19:15 GMT

பொள்ளாச்சி

அம்பராம்பாளையம் ஆற்றில் தண்ணீர் திருட்டை தடுக்க அதிரடி ஆய்வு பணி நடைபெற்றது. அப்போது அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

தண்ணீர் திருட்டு

பொள்ளாச்சியை அடுத்த அம்பராம்பாளையம் ஆற்றில் தண்ணீர் திருட்டு நடைபெறுவதாக நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து நீர்வளத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவு நேரத்தில் அம்பராம்பாளையம் பகுதியில் அதிரடியாக ஆய்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அதில் அம்பராம்பாளையம், பெரியபோது உள்பட பல இடங்களில் சிலர் அனுமதியின்றி ஆற்றில் சட்டவிரோதமாக குழாய்கள் அமைத்து தண்ணீர் திருடுவதை கண்டனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை அழைத்து கண்டித்தனர்.

எச்சரிக்கை

அப்போது தண்ணீர் திருட்டில் ஈடுபட்ட சிலர், கடும் வறட்சி காரணமாக தென்னை உள்பட பயிர்கள் வாடுவதை தடுக்க சிறிது தண்ணீர் எடுத்தோம். இதை பெரிய பிரச்சினையாக கருதக்கூடாது எனக்கூறி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

இதையடுத்து அதிகாரிகள் கூறும்போது, தண்ணீர் திருட்டில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகும். திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது பாரபட்சமின்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டவிரோதமாக ஆற்றில் பதித்துள்ள குழாய்களை அகற்றி கொள்ள வேண்டும் என்று எச்சரித்து குழாய்களை அகற்ற வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்