கார் வெடிப்பு சம்பவத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்

கோவை மக்கள் அமைதியை விரும்புவதால் கார் வெடிப்பு சம்பவத்தில் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-10-27 18:45 GMT

கோவை மக்கள் அமைதியை விரும்புவதால் கார் வெடிப்பு சம்பவத்தில் பாரபட்சம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வலியுறுத்தி உள்ளார்.

எம்.எல்.ஏ. நிதி

கோவையில் கலெக்டர் அலுவலகத்தில் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் ஆய்வு கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் முடிந்த பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

கலெக்டர் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டு எங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினோம். எம்.எல்.ஏ.க்கள் மேம்பாட்டு நிதி முழுவதும் வழங்கவில்லை.

பாதி அளவுக்குதான் கொடுத்து உள்ளனர். அந்த நிதியை முழுமையாக விடுவிக்க வேண்டும். வளர்ச்சி பணிகளை தட்டிக்கழிக்காமல் செய்ய வேண்டும்.

பாரபட்சமின்றி நடவடிக்கை

கோவையில் தற்போது மிகவும் மோசமான சூழ்நிலை நிலவி வருகிறது. மக்கள் அச்சத்தில் உள்ளனர். 1998-ம் ஆண்டு நடந்த சம்பவம் போன்று ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் உள்ளது.

எனவே தற்போது நடந்து உள்ள கார் வெடிப்பு சம்பவத்தில் துரித விசாரணை நடத்தி பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண் டும். ஏற்கனவே கோவையில் நடந்த சம்பவத்தால் கோவையின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்பட்டது. தற்போது தான் அது சரியாகி வருகிறது.

உளவுத்துறை தோல்வி

தமிழக உளவுத்துறை முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது. முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உளவுத்துறை அதிகாரி கள் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே செய்கிறார்கள்.

கோவையில் நடந்த சம்பவத்துக்கு ஜமாத் தலைவர்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக கூறி உள்ளனர். கோவை மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். எனவே அரசு இனியாவது விழித்துக்கொண்டு மக்களை பாதுகாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்