அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
தூய்மை பணிக்கான ஒப்பந்தம் குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூடலூர் நகராட்சி தலைவர் போலீசில் புகார் அளித்தார்.;
கூடலூர்
கூடலூர் நகராட்சியில் தூய்மை பணி மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் குறித்து கடந்த வாரம் ஒப்பந்ததாரர் ஒருவர் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் சிலர் தனியார் தங்கும் விடுதியில் சந்தித்ததாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியானது. இந்தநிலையில் கூடலூர் நகராட்சி தலைவர் பரிமளா, துணைத் தலைவர் சிவராஜ், கவுன்சிலர் ராஜு ஆகியோர் கூடலூர் போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜை சந்தித்து புகார் அளித்தனர். அதில், நகராட்சி பகுதியில் தூய்மை பணி மேற்கொள்வதற்கான ஒப்பந்தம் செய்வது குறித்து தலைவர், துணை தலைவர் உள்பட சில கவுன்சிலர்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. எனவே, அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு உள்ளது. தொடர்ந்து போலீஸ் துணை சூப்பிரண்டு செல்வராஜ் சைபர் கிரைம் போலீஸ் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.