தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்

செல்போன் கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தக சங்கம் வலியுறுத்தி உள்ளது.;

Update: 2023-05-14 21:15 GMT

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை நகர வர்த்தக சங்க அவசர கூட்டம் பழனியப்பன் தெரு வர்த்தக சங்க அலுவலகத்தில் தலைவர் எஸ்.ராமானுஜம் தலைமையில் நடந்தது. பொதுச்செயலாளர் ஏ.கே. குமார் வரவேற்றார். நிர்வாகிகள் விஜயரங்கன், மணிகண்டன், சுரேஷ்கண்ணா, சரவணன், ராமதாஸ், வீரப்பன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.அறந்தாங்கி ரோடு காந்தி சிலை அருகில் உள்ள செல்போன் கடையில் சில சமூகவிரோதிகள் அத்துமீறி புகுந்து கடைக்காரர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தி பொருட்களை சேதப்படுத்தி உள்ளனர். தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். வியாபாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு முக்கிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் தன்ராஜ் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்