முதன்மை மாவட்டமாக மாற்றுவதற்கான செயல் திட்டம்

முதன்மை மாவட்டமாக மாற்றுவதற்கான செயல் திட்டத்தினை கலெக்டர் மேகநாத ரெட்டியிடம் வழங்கினர்.

Update: 2022-06-20 19:35 GMT

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கடந்த 14-ந் தேதி மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி. லிங்கம் தலைமையில் ராஜபாளையம் அருகே சொக்கநாதன்புத்தூரிலிருந்தும், மாநிலக்குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி தலைமையில் வத்திராயிருப்பிலிருந்தும், மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் தலைமையில் பரளச்சி கிராமத்திலிருந்தும் கலெக்டர் அலுவலகத்திற்கு பாத யாத்திரையாக சென்றனர்.விவசாயம், தொழில், கல்வி, சுகாதாரம், அடிப்படை வசதிகள் மற்றும் கூட்டுறவு அமைப்புகளை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்த பாதயாத்திரை மேற்கொண்டனர்.இந்த குழுவினர் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்தடைந்த பின்னர் மாவட்ட மக்களின் வாழ்வுரிமை பாதுகாப்பு வளர்ச்சி என்ற அடிப்படையில் முதன்மை மாவட்டமாக மாற்றுவதற்கான செயல் திட்டத்தினை கலெக்டர் மேகநாத ரெட்டியிடம் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்