பொதுத்தேர்வில் ஆப்சென்டான மாணவர்களுக்கு அதிரடி உத்தரவு..!
பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்
தமிழகத்தில் கடந்த மே மாதம் 5-ந்தேதி தொடங்கிய பொதுத்தேர்வுகள் 31-ந்தேதி வரை நடைபெற்றது. 10, 11, 12-ம் வகுப்பு வரை சேர்த்து 27 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுகளை எழுதினர். இதில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற தேர்வுகளில் 45 ஆயிரம் மாணவர்கள் வரை தேர்வுக்கு வராமல் ஆப்சென்ட் ஆனது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மொத்தமாக 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர்.
இந்த நிலையில் பல்வேறு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் ,தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர் .அதில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களின் முழு விவரங்களை கண்டறிந்து வருகிற ஜூலை மாதம் நடக்கக்கூடிய உடனடி தேர்வில் பங்கேற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவித்துள்ளனர் .
11,12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவரக்ளும் மீண்டும் அழைக்கப்பட்டு உடனடி தேர்வில் பங்கேற்க கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது