போலீஸ் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை:சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு கொடுத்த மக்கள்

போலீஸ் நிலையத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி புதன்கிழமை தூத்துக்குடி மாவட்ட சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் மனு கொடுத்தனர்.

Update: 2023-08-02 18:45 GMT

தமிழ்நாடு போலீஸ் டி.ஜி.பி. உத்தரவின்படி ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு உன்னிகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் ஏற்கனவே புகார் அளித்த 3 மனுதாரர்கள் மீண்டும் புகார் மனு கொடுத்தனர். அதே போன்று புதிதாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 41 பேரும் மனு கொடுத்தனர். நேற்று ஒரே நாளில் மொத்தம் 44 பேர் மனு கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயராம் மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்