நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு செய்தால் நடவடிக்கை-உணவு கடத்தல் தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசார் எச்சரிக்கை

மதுரை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு செய்தால் நடவடிக்கை என்று உணவு கடத்தல் தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

Update: 2023-07-05 21:07 GMT

மதுரை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு செய்தால் நடவடிக்கை என்று உணவு கடத்தல் தடுப்பு புலனாய்வு பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.

ஆய்வு கூட்டம்

மதுரை கலெக்டர் அலுவலகத்தில் உணவு கடத்தல் புலனாய்வு பிரிவு போலீசார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா, உணவு கடத்தல் தடுப்பு பிரிவு மதுரை மண்டல போலீஸ் சூப்பிரண்டு சினேகப்பிரியா ஆகியோர் தலைமையில் கூட்டம் நடந்தது. அதில் கூட்டுறவு இணைபதிவாளர் குருமூர்த்தி, மண்டல மேலாளர் முருகேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் முருகசெல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் வட்ட வழங்கல் அதிகாரி, கூட்டுறவு சார்பதிவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில் மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகள் தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டது.

அரிசி ஆலைகளில் கண்காணிப்பு கேமரா

அதில் விவசாயிகளிடம் நெல்லை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும். அதற்கு இடைத்தரகர்கள் தலையீடு எதுவும் இருக்கக்கூடாது. மேலும் அங்கு அடிக்கடி முறைகேடுகள் தொடர்பாக ஆய்வு செய்து, முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரிசி ஆலைகளில் முறைகேடுகளை தடுப்பதற்கு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

மேலும் அரிசி ஆலைகளில் தரமான முறையில் நெல் அரவை செய்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ரேஷன் கடைகளில் அரசால் நியமிக்கப்பட்ட பணியாளர்கள் தவிர வெளிநபர்கள் யாரும் ரேஷன்கடைகளில் பணியில் இருக்க கூடாது. மேலும் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் பொதுவினியோக திட்ட பொருட்கள் தரமானதாகவும் எடை குறைவின்றியும் வழங்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. முறைகேடுகளில் ஈடுபடும் ரேஷன்கடை ஊழியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்