14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் நடவடிக்கை

14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-25 19:15 GMT

14 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

குழந்தை தொழிலாளர்

சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி ெவளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது:-

குழந்தை தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) திருத்த சட்டத்தின்படி 14 வயது நிறைவடையாத குழந்தையினை எந்த ஒரு தொழில் சம்பந்தப்பட்ட பணிகளிலும் பணியமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறும் பட்சத்தில் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி தயாரிப்பு நிறுவனங்கள், மருந்துக்கடைகள் உள்ளிட்ட இதர நிறுவனங்களில் குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தகவல் தெரிவிக்கலாம்

இது போல் 18 வயது நிறைவடையாத இளம் பருவத்தினரை செங்கல் சூளை, கல்குவாரி, பட்டாசு தொழில் போன்ற இதரவகை பணிகளில் பணியமர்த்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 14 வயதிற்கு உட்பட்ட குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்திய 14 கடை நிறுவன உரிமையாளர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர் எவரும் பணிபுரிந்து வருவது கண்டறியப்பட்டால், தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) சிவகங்கை கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம், அரசினிப்பட்டி ரோடு, காஞ்சிரங்கால், சிவகங்கை என்ற முகவரிக்கோ அல்லது குழந்தைகளுக்கான இலவச தொலைபேசி உதவி எண் 1098 தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்