வீடுகளில் குடிநீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சினால் நடவடிக்கை

வீடுகளில் குடிநீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சினால் நடவடிக்கை எடுக்கப்படும்.;

Update: 2023-09-17 19:46 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் குடிநீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சி எடுப்பதாக கிடைத்த தகவலின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி துறை அதிகாரிகள் அதிரடி சோதனை செய்தனர். அப்போது சீனியாபுரம் போன்ற பகுதிகளில் மின்மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சிய 7 மின் மோட்டார்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நகர்மன்ற அதிகாரி கூறியதாவது:-

ஸ்ரீவில்லிபுத்தூரில் குடிநீர் வினியோகம் சரி செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் யாரேனும் வீடுகளில் குடிநீரை மின் மோட்டார் மூலம் உறிஞ்சி எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்