உரிமம் பெறாமல் விதை விற்றால் நடவடிக்கை

உரிமம் பெறாமல் விதைகள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் வனஜா எச்சரித்துள்ளார்.

Update: 2023-08-14 19:25 GMT


உரிமம் பெறாமல் விதைகள் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் வனஜா எச்சரித்துள்ளார்.

விவர அட்டை

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

தற்போது விதைப்பு பருவத்தில் மக்காச்சோளம், பருத்தி பயிரிடும் விவசாயிகள் தங்களுக்கு தேவையான விதைகளை வாங்கும் போது தமிழ்நாடு அரசால் விதை விற்பனை செய்ய உரிமம் பெற்ற விற்பனை நிலையங்களில் மட்டுமே விதைகளை வாங்க வேண்டும். மேலும் விதைச்சட்டம் 1966-ல் குறிப்பிட்ட 14 காரணிகளும் அட்டையில் குறிப்பிட்டுள்ளதை உறுதி செய்து வாங்க வேண்டும்.

அவ்வாறு விவசாயிகள் விதைகளை வாங்கும் போது விதைப்பையில் உள்ள விவர அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள பயிர் ரகம், காலாவதி நாள், குவியல் எண், அவரவர் பகுதிக்கு ஏற்றதா என்பதை பார்த்து வாங்க வேண்டும்.

போலி விதைகள்

விதைகள் வாங்கும் போது விற்பனை பட்டியலில் விதையின் ரகம், குவியல் எண், காலாவதிநாள் குறிப்பிடப்பட்டிருக்கிறதா என கண்காணித்து கேட்டு வாங்க வேண்டும்.

விதை விற்பனையாளர்கள் உரிமம் பெறாமல் விதைகள் விற்பனை செய்தாலோ, விற்பனை பட்டியல் இல்லாமல் விற்பனை செய்தாலோ, போலி விதைகளை விற்பனை செய்தாலோ, நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு மேல் விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்ட விற்பனையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கடும் நடவடிக்கை

பழக்கன்று, தென்னை மற்றும் நாற்றுகள் விற்பனை செய்யும் நர்சரி உரிமையாளர்கள் தவறாமல் விதை விற்பனை உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

உரிமம் இல்லாமல் விதை விற்பனை மற்றும் நர்சரி வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்