பருவ மழை மீட்பு பணிகள் குறித்து தீயணைப்பு துறையினர் செயல் விளக்கம்

காமக்கூர் பெரிய ஏரியில் பருவ மழை மீட்பு பணிகள் குறித்து தீயணைப்பு துறையினர் செயல் விளக்கம் செய்து காட்டினர்.

Update: 2022-09-01 17:29 GMT

ஆரணி

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவின்படி ஆரணியை அடுத்த காமக்கூர் பெரிய ஏரி பகுதியில் பருவ மழை தொடங்கி விட்டதால் நீர் நிலைகளில் வெள்ளஅபாய நிலையில் இருந்தும், பேரிடர்பாடுகளில் இருந்தும் பொதுமக்களை எவ்வாறு காப்பது குறித்து தீயணைப்பு துறையினர் மாதிரி செயல் விளக்கம் நடத்தினர்.

இதற்கு ஆரணி உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி தலைமை தாங்கினார்.

காமக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் குப்பு சங்கர், துணைத்தலைவர் சங்கீதா செந்தில்வேல், வார்டு உறுப்பினர்கள் ஒன்றியக்குழு உறுப்பினர் லட்சுமி கோபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி தாசில்தார் ஜெகதீசன் வரவேற்றார்.

ஆரணி தீயணைப்பு நிலைய அலுவலர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் படைவீரர்களால் பிளாஸ்டிக் காலி டப்பாக்களை கொண்டும் நீர்நிலைப் பகுதிகளில் தத்தளிப்பவர்களை எப்படி மீட்பது என்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினார்.

கையில் உள்ள பொருட்களைக் கொண்டு மீட்பது குறித்தும் செயல் விளக்கம் அளித்தனர்.

ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன், ஆரணி மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், மண்டல துணை தாசில்தார் ரவிச்சந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெகதீசன், அஸ்வினி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ரமேஷ்பாபு, ஆசிரியர்கள், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், மகளிர் குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

முடிவில் ஊராட்சி செயலர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்