பதிவு செய்யாமல் செயல்படும் சுற்றுலா நிறுவனங்கள் மீது நடவடிக்கை

பதிவு செய்யாமல் செயல்படும் சுற்றுலா நிறுவனங்கள் மீது நடவடிக்கை

Update: 2023-08-06 18:45 GMT

திருவாரூர் மாவட்டத்தில் பதிவு செய்யாமல் செயல்படும் சுற்றுலா நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சாருஸ்ரீ எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திணைக்களம்

தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையானது மாநிலத்தின் சுற்றுலா நடவடிக்கைகளை ஒழுங்குப்படுத்துதல் மற்றும் தரப்படுத்துதல் மூலம் அனைத்து பங்குதாரர்களுக்கும் சுற்றுலா பாதுகாப்பானதாகவும், அணுக கூடியதாகவும், நிலையானதாகவும் மாற்றும் நோக்கத்துடன் மாநிலத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா ஆப்ரேட்டர்களின் (தொழில் முனைவோர்கள்) வழிகாட்டுதல்களை உருவாக்குதல் மற்றும் பதிவு செய்வதற்கான திணைக்களம் www.tntourismtors.com கடந்த ஆண்டு 27.9.2022 உருவாக்கப்பட்டுள்ளது.

படுக்கை மற்றும் காலை உணவு, சாகச சுற்றுலா ஆப்ரேட்டர்கள், கேம்பிங் ஆப்ரேட்டர்கள், கேரவன்டூர் ஆப்ரேட்டர்கள், கேரவன்பார்க் ஆப்ரேட்டர்கள் தொழில் நடத்துவர் அனைவரும் இந்த ஆன்லைன் பதிவுபோர்டல், பதிவு செய்து கொள்ள பத்திரிக்கை செய்தி மூலம் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

தொழில்நிறுவனங்கள் மீது நடவடிக்கை

ஆனால் இதுநாள் வரை பல சுற்றுலா தொழில் நிறுவனங்கள் பதிவு செய்யாமல் செயல்பட்டு வருகிறது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் மற்றும் புதிதாக தொழில் தொடங்கவுள்ள தொழில் நிறுவனங்கள் திணைக்களம் www.tntourismawards.com என்ற இணையதளம் மூலம் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. பதிவு செய்யாமல் செயல்படும் சுற்றுலா தொழில் நிறுவனங்கள் மீது மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே நீங்கள் பதிவு சான்றிதழை பெற தவறிவிட்டதால், உங்கள் நிறுவனம் வளாகத்திற்கு SHOW CAUSE NOTICE அனுப்பப்படுகிறது. பதிவு இல்லாத ஸ்தாபனம் இந்த அறிவிப்பு கிடைத்த நாளிலிருந்து ஒரு வாரத்திற்குள் இது தொடர்பாக விரிவான எழுத்துப்பூர்வ பதிலை சமர்ப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

சீல் வைக்கப்படும்

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதில் வரவில்லை என்றால், இது தொடர்பாக எதுவும் குறிப்பிடத்தேவையில்லை என்றும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கருதப்படுகிறது. மேலும் எந்த அறிவிப்பும் இன்றி உங்கள் வளாகத்திற்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கருதப்படுகிறது. மேலும், இது தொடர்பான விவரங்களை அறிந்து கொள்ள சுற்றுலா அலுவலர் அலுவலக தொலைபேசி எண்.043666-223999 மற்றும் 8925158497 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது ourismtvr@gmailcom என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளும்படி கேட்டு கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்