தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை

தேசிய கொடி ஏற்றுவதை தடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2022-08-12 17:54 GMT

திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அமர் குஷ்வாஹா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர தினவிழா திங்கட்கிழமை திருப்பத்தூர் மாவட்டத்தில் கொண்டாடப்பட உள்ளது. அனைத்து அரசு அலுவகைங்கள், ஊராட்சி அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட உள்ளது. அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சம்மந்தப்பட்ட கிராம ஊராட்சி தலைவர்களால் மட்டுமே தேசிய கொடி ஏற்றப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தலைவராக உள்ள நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சி தலைவர்கள் தேசிய கொடி ஏற்றுவதை யாரேனும் தடுக்கும் விதமாக செயல்பட்டால் உடடியாக திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் 7402903511 தொலைபேசி எண்ணில் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் புகார் அளிக்கலாம்.

கொடி ஏற்றுவதை தடுக்கும் விதமாக யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் காவல் துறை மூலம் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்