போலி ரசீது தயாரித்து வணிகம் செய்வோர் மீது நடவடிக்கை - அதிகாரிகளுக்கு அமைச்சர் மூர்த்தி உத்தரவு

முறைகேட்டில் ஈடுபடுவோரின் ஜி.எஸ்.டி. பதிவை முடக்கம் செய்யுமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.;

Update:2024-02-09 19:16 IST

சென்னை,

சென்னை நந்தனத்தில் பத்திரப்பதிவுத்துறை மற்றும் வணிகவரித்துறை அலுவலகர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி, அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் போலி ரசீது தயாரித்து வணிகம் செய்வோரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபடுவோரை கண்காணித்து அவர்களுடைய ஜி.எஸ்.டி. பதிவை முடக்கம் செய்யுமாறும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்