வழித்தடத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

வழித்தடத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு அளித்தனா்;

Update: 2023-08-31 22:03 GMT

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி சிக்கந்தர் வீதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவர் தனது மனைவி மற்றும் மாற்றுத்திறனாளி மகளுடன் மனு கொடுப்பதற்காக ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு நேற்று வந்தார். பின்னர் அவர்கள் மனு கொடுப்பதற்காக காத்திருந்தனர்.

இதை அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் விரைந்து சென்று அவர்களிடம் நேரடியாக மனுவை பெற்றுக்கொண்டார். இதைத்தொடர்ந்து அவர், மனுவின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசாருக்கு உத்தரவிட்டார்.

போலீஸ் சூப்பிரண்டிடம், வெள்ளியங்கிரி கொடுத்திருந்த மனுவில், 'நான் குடியிருக்கும் பகுதியில் உள்ளவர்கள் நாங்கள் சென்று வரும் வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதனால் நாங்கள் வெளியில் சென்று வர முடியவில்லை. குறிப்பாக எனது மாற்றுத்திறனாளி மகளை வெளியில் அழைத்து செல்ல வேண்டும் என்றால் சக்கர நாற்காலியில் வைத்து தான் கொண்டுசெல்ல முடியும். ஆனால் அவர்கள் வழித்தடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதால் அவசர தேவைக்கு கூட மகளை அழைத்து செல்ல முடியவில்லை. இதனால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம்.

இதுகுறித்து நாங்கள் அவர்களிடம் கேட்டால் எங்களை தகாத வார்த்தைகளால் பேசுகிறார்கள். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நாங்கள் அந்த பகுதியில் சென்று வர வழிவகை செய்யவேண்டும்' என்று கூறி இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்