சாலைகளில் மாடுகளை சுற்றித்திரியவிடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை
வாலாஜா நகராட்சி பகுதியில் சாலைகளில் மாடுகளை சுற்றித்திரியவிடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை.
வாலாஜா நகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து தெருக்களிலும் மாடுகள் சுற்றித்திரிவதால் சாலையில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கும், மாணவர்களுக்கும், வாகனங்களுக்கும் இடையூறாகவும், பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறது. எனவே நகராட்சி எல்லை பகுதிகளில், மாடுகள் வளப்பவர்கள் தங்களது வீடுகளில், பட்டியிலோ அல்லது விவசாய நிலங்களிலோ கட்டி வளர்க்கவேண்டும். மீறி மாடுகள் சாலை, தெருவில் சுற்றி திரிந்தால் மாடுகளின் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுத்தல், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தல், வழக்கு பதிவு செய்த சட்ட நடவடிக்கை எடுத்தல், உரிமைகோராத மாடுகளை பொது ஏலம் விடுதல் போன்ற கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இந்த தகவலை நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.