இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை

வெளிமாநில தொழிலாளர்கள் பற்றி விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2023-06-24 15:10 GMT

திண்டுக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சிவசிந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திண்டுக்கல் மாவட்டத்தில் செயல்படும் மளிகை கடைகள், தொழில் நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், கோழிப்பண்ணைகள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் வேலை பார்க்கின்றனர். அவர்கள் தொடர்பான விவரங்கள், வீட்டு வேலை செய்யும் வெளி மாநில தொழிலாளர்கள் ஆகியோரின் விவரங்களை https://labour.tn.gov.in.ism என்ற இணையதளத்தில் வெளி மாநில தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பவர்கள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த விவரங்கள் முறையாக பதிவேற்றம் செய்யப்படுகிறதா? என்று கடைகள், தொழில் நிறுவனங்களில் அவ்வப்போது தொழிலாளர் நலத்துறை சார்பில் ஆய்வு நடத்தப்படும். அப்போது வெளி மாநில தொழிலாளர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்யாமல் நிறுவனங்கள் இருப்பது தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்