சமூக வலைதளங்களில் மருத்துவ அறிவுரைகளை கூறும் தகுதியற்றோர் மீது நடவடிக்கை

சமூக வலைதளங்களில் மருத்துவ அறிவுரைகளை கூறும் தகுதியற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

Update: 2023-05-24 18:45 GMT

காரைக்குடி

காரைக்குடியில் இந்திய மருத்துவ கழகம் காரைக்குடி மெடிக்கல் கவுன்சில் கிளை சார்பில் மருத்துவமனைகளின் கூட்டமைப்பு சார்பில் கிழக்கு மண்டல கருத்தரங்கம் மற்றும் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. கிளையின் தலைவர் டாக்டர் சந்திரமோகன் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் குமரேசன் வரவேற்றார். பொருளாளர் பாலாஜி, டாக்டர்கள் காமாட்சி சந்திரன், ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐ.எம்.ஏ. மாநில தலைவர் டாக்டர் செந்தமிழ் பாரி, செயலாளர் தியாகராஜன், பொருளாளர் ராகவேந்திரா, தேசிய அமைப்பு மருத்துவ பிரிவு தலைவர் ரவிக்குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இந்திய மருத்துவ கழக மாநில தலைவர் டாக்டர் செந்தமிழ் பாரி கூறுகையில், அரசு மற்றும் தனியார் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும். தனியார் மருத்துவமனைகளுக்கு ஒற்றை சாரள முறையில் அனைத்து அனுமதிகளையும் வழங்க வேண்டும். கட்டிட அனுமதிக்கு 5 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பித்தால் போதும் என்ற சட்டத்தை இயற்ற வேண்டும். டாக்டர்களின் மருந்து சீட்டு இல்லாமல் மருந்து வழங்கும் கடைகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக வலைதளங்களில் மருத்துவ அறிவுரை மற்றும் தவறான சிகிச்சை முறைகளை சிலர் தங்கள் சுய விளம்பரத்துக்காக செய்வதை அரசு உரிய முறையில் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்