முன் அனுமதி பெறாமல் செயல்பட்ட75 நிறுவனங்கள் மீது நடவடிக்கைதொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தகவல்
சேலம் மாவட்டத்தில் முன் அனுமதி பெறாமல் செயல்பட்ட 75 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தெரிவித்தார்.
சேலம்
சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
காந்தி ஜெயந்தியையொட்டி விடுமுறை தினமான நேற்று மாவட்டத்தில் உள்ள 47 கடைகள் மற்றும் 55 உணவு நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டத்தின் கீழ் முன் அனுமதி பெறாமல் 24 கடை நிறுவனங்கள், 51 உணவு நிறுவனங்கள் செயல்பட்டது தெரிந்தது. அதன்படி அனுமதி பெறாமல் செயல்பட்ட மொத்தம் 75 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன. இது போன்று ஆய்வுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இதில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.