மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம்
தேனி மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முகாம் நடந்தது
தேனி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 9-ந்தேதி வெளியிடப்பட்டது. அன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த பணிகளுக்காக சிறப்பு முகாம்கள் நடந்தன. மாவட்டத்தில் 536 நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி அமைவிடங்களில் இந்த முகாம்கள் நடந்தன.
முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் தொடர்பான மனுக்கள் பெறப்பட்டன. தேனியில் நடந்த முகாம்களை மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், தாசில்தார் சரவணபாபு, நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர். வாக்குச்சாவடிகளில் நேற்றும் சிறப்பு முகாம்கள் நடந்தன.